வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (30/11/2017)

கடைசி தொடர்பு:17:15 (30/11/2017)

''எங்களுக்கான தண்ணீர் திருடு போவதை அனுமதிக்க முடியாது'' - பெண் கலெக்டரிடம் பொங்கிய விவசாயிகள்!

     

முல்லைப்பெரியார் அணையிலிருந்து எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 1,000 கன அடி தண்ணீரை மேலூர் விவசாயிகள் திருடிவிடுகிறார்கள்” என்ற பகீர் குற்றச்சாட்டு மாவட்ட ஆட்சியர் லதா முன் வைத்திருக்கிறார்கள் விவசாயிகள்.

பெரியார் பாசன விவசாயிகள் சார்பாகச் சந்திரன் பேசுகையில், “சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் இடையமேலூர் போன்ற பகுதிகளில் சுமார் 40 கண்மாய்கள் இருக்கிறன. ஒவ்வோர் ஆண்டும் முல்லைப் பெரியார் அணையிலிருந்து மேலூர் கால்வாய்க்குத் தண்ணீர் வரும்போது 1,000 கனஅடி தண்ணீர் சிவகங்கை மாவட்டத்துக்குப் பாசனத்துக்காக வழங்கப்பட வேண்டும் என்று நீர் பாசன விதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்தத் தண்ணீரை இங்கே கொண்டுவருவதில் யாருக்கும் அக்கறை இல்லை.

முன்னாள் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது போலீஸ் பாதுகாப்போடு போய் மேலூர் கால்வாயில் இருந்து 40 கண்மாய்களுக்குத் தண்ணீர் கொண்டுவந்தார். அப்போது நல்ல விவசாயம் செய்ய முடிந்தது. தண்ணீர் பிரச்னை இல்லை. மேலும், கால்வாய்கள் இருக்கும் இடம் மதுரை மாவட்டம் என்பதால் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரம் அந்த மாவட்டப் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம்தான் அதிகாரம் முழுவதும் இருக்கிறது. நமக்கான உரிமையை நிலைநாட்ட முடியாமல் நமக்கு வரவேண்டிய தண்ணீர் திருடுபோய்க்கொண்டிருக்கிறது. முறையாகச் சிவகங்கை மாவட்டப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி ஒவ்வோர் ஆண்டும் பாசனத்துக்கு முல்லைப் பெரியார் அணையின் தண்ணீரை இங்கே கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க