வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (30/11/2017)

கடைசி தொடர்பு:20:30 (30/11/2017)

மணல் குவாரிகளை நாளையே மூடினால் நல்லது! நல்லகண்ணு ஆதங்கம்

``ஆறு மாதத்துக்குள் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்பது அதிகமான காலக்கெடு, நாளையே மணல் குவாரிகளை மூட வேண்டும்" இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கருத்து கூறினார்.

மணல் குவாரிகளை

மதுரையில் சமம் குடிமக்கள் இயக்கம் சி.ஜே.ராஜன் தலைமையில்நடந்த `ஓலமிடும் ஆற்று மணல்' என்ற நூல் அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசும்போது, ``மணல் விற்பனையில் முறைகேடு இல்லை என்று முதலமைச்சர் சொல்வது தவறு. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிந்து மணல் கொள்ளை நடக்கிறது. விதிகளை மீறி மணல் கொள்ளை நடைபெறுகிறது. விதிமீறலைக் கண்டித்த காவல் அதிகாரி, தாசில்தார், மாணவன் கூட கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கட்டடம் கட்ட இவ்வளவு சிமெண்ட் தேவை, இவ்வளவு மணல் தேவை என முறைப்படுத்தி மணல் விற்பனையை மேற்கொண்டிருக்கலாம். மணல் கொள்ளையைத் தடுத்திருக்கலாம். ஆறு மாதத்துக்குள் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்பது அதிக காலக்கெடு. நாளையே மணல் குவாரிகளை மூட வேண்டும். மணல் தேவையை எம்.சாண்ட், இறக்குமதி மணல் கொண்டு சமாளிக்கலாம், ஆந்திரா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. மணல் அள்ளி, விற்பனை செய்வதில் முறைகேடு நடைபெற்றிருக்கிறது. முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சி செய்கிறார் முதல்வர்’' எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க