சிறுமியிடம் பாலியல் சீண்டல் - பின்னலாடை தொழிலாளி கைது

 

1-ம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பின்னலாடை தொழிலாளி ஒருவரை திருப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. 45 வயதான இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறை நாள்களிலும், வேலை இல்லாத நாள்களிலும் தன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று வருவது சுப்பிரமணியின் வழக்கமாக இருந்திருக்கிறது. அச்சமயங்களில் அந்த உறவினர் வீட்டின் அருகே உள்ள 1-ம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவரிடம் சுப்பிரமணி தொடர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.
இதனால் கடந்த சில நாள்களாகப் பள்ளிக்குச் செல்வதை தவிர்த்திருக்கிறார் அந்த பாதிக்கப்பட்ட சிறுமி.  பின்னர் சிறுமியிடம் அவரது பெற்றோர் தொடர்ந்து விசாரித்தபோது, சுப்பிரமணி அச்சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் போஸ்கோ, வன்கொடுமை வழக்கு மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியைக் கைது செய்தனர். அதனையடுத்து கோவை மத்தியச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!