திருவாடானை சிவன் கோயில் சீர்கேடுகளை களையக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்!

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பூஜைகள் சரிவர நடக்காததை கண்டித்து கிராம மக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 

திருவாடானை கோயில் சீர்கேடுகளை களையக் கோரி உண்ணாவிரதம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வரலாற்று சிறப்புமிக்க சினேகவள்ளி தாயார் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆகம விதிகளின்படி ஆறு காலபூஜைகள்  ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கோவில் நிர்வாக சீர்கேட்டினால் பூஜைகள் சரிவர நடைபெற வில்லை என்றும், இறைபணியில் அலட்சியம் காட்டி வருகிறார்கள் என்றும் பக்தர்களிடையே புகார் எழுந்தது.

 இது குறித்து ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திடம் பல முறை கூறியும் இதுநாள்வரை சரிசெய்யப்படவில்லை. இதையடுத்து  இக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட இருபத்தி இரண்டு கிராம மக்கள் வியாழக்கிழமை கோயில் அருகில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பின்னரும் யிலின் குறைகளை  களைய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களை திரட்டி அடுத்தகட்ட போராட்டங்களை நடத்தப் போவதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!