வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (01/12/2017)

கடைசி தொடர்பு:11:49 (01/12/2017)

தி.மு.க வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்போம்! - தா.பாண்டியன் சூளுரை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
 
தா.பாண்டியன்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார். 
 
அவர் பேசும்போது, “நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை வரும்  21-ம் தேதி முடித்துவிட்டு  24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை வைத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 
 
எங்கள் கட்சி தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து பிரசாரம் செய்து, அவரை அ.தி.மு.க வேட்பாளரைவிட அதிக வாக்கு பெற்று வெற்றி பெறச் செய்வோம். 
 
தற்போதுவரை சென்னை உயர்நீதிமன்றம் 'மெட்ராஸ்' உயர்நீதிமன்றம் என அழைக்கப்படுகிறது. அதைத் தமிழில் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என அழைக்கப்பட வேண்டும்” என்றார். 
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி வந்திருந்த தா.பாண்டியன், நாட்டில் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என்று கூறியிருந்தார். இப்போதும், தேர்தல் ஆணையத்தை விமர்சித்திருப்பதும், சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என அழைக்க கோரிக்கை வைத்திருப்பது அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க