திருச்சியில் அடுத்தடுத்து விபத்து! 18-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

அடுத்தடுத்த விபத்துகளால் திருச்சியில் இன்று பரபரப்பு கூடியது. 
 
விபத்துக்கள்
 
திருச்சியில் இருந்து லால்குடியை நோக்கி அரியலூருக்கு நேற்று காலை அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்தை அரியலூரைச் சேர்ந்த ஓட்டுநர் கண்ணன் என்பவர் ஓட்டிவந்தார். அந்தப் பேருந்தில் சுமார் சுமார் 25 க்கும் மேற்பட்ட பயணிகள்  பயணம் செய்தனர். பேருந்து லால்குடி அடுத்துள்ள வாளாடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது,  அப்போது லால்குடியிலிருந்து திருச்சியை நோக்கி வந்துகொண்டிருந்த எம்.ஐ.இ.டி எனும் தனியார் கல்லூரிப் பேருந்து எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்துமீது பயங்கர வேகமாக மோதியது. 
 
இதில் அரசுப் பேருந்து நிலைதடுமாறி அருகில் இருந்த அரசுப் பள்ளிச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் அரசுப் பேருந்து டிரைவர் கண்ணன், பேருந்தில் பயணித்த லதா மற்றும் அவரது மகன் ஜெயசூர்யா மற்றும் கல்லூரிப் பேருந்தில் பயணம் செய்த மாணவி ஜெனிபர்மேரி உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். 
 
தகவல் அறிந்ததும் லால்குடி போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த நான்குபேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து லால்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
 
இதேபோல் திருச்சியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற சுற்றுலா வாகனம் ஒன்று  திருச்சியை அடுத்த மணிகண்டம் புதிய காந்தி மார்க்கெட்  அருகே  விபத்தில் சிக்கிக்கொண்டது. அந்த வாகனத்தில் பயணம் செய்த 15 பேர் படுகாயம் அடைந்தார்கள். இதில் 2 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்..
அடுத்தடுத்த விபத்துகளால் திருச்சியில் பரபரப்பு நிலவியது.  திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் பேருந்துகள், கல்லூரிப் பேருந்துகள் கட்டுப்பாடில்லாமல் வேகமாக செல்கிறது. இதனால் விபத்து அதிகமாக நடக்கிறது. இதைத் தடுக்க வேண்டும்" என்கிறார்கள் பொதுமக்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!