வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (01/12/2017)

கடைசி தொடர்பு:08:36 (01/12/2017)

விவசாயத்தை அழிக்கும் கோயில் மாடுகள்! கலெக்டரிடம் புகார்

 

கோயில் மாடுகள் அட்டகாசத்தால் விவசாயம் செய்யமுடியாமல் நிற்கிறோம் எங்களுக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்திருக்கிறார்கள் தாழையூர் கிராம மக்கள்.

அவர்கள் இதுகுறித்து பேசும்போது, “சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள தாழையூர் கிராமம். இந்தக் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளைமாடுகளை வழங்கிவருகிறார்கள். இந்தக் கோயிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட மாடுகளின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி பதினைந்தாயிரம் இருக்கும். இரவு நேரங்களில் இந்த மாடுகள் விவசாய நிலங்களில் இறங்கி பயிர்களை மேய்வதோடு விவசாயத்தையும் அழித்துவிடுகின்றன.

அனுமந்தகுடி, தத்தனி, பனங்குளம், சித்தானூர், கண்ணங்குடி, சடையமங்கலம் உள்ளிட்ட 62 கிராமங்கள் இந்தக் கோயிலைச் சுற்றி உள்ளன. மாடுகளால் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் செய்யப்படும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் விவசாயம் செய்வதற்கு ஐம்பதாயிரம் வரைக்கும் செலவாகிறது. நாங்கள் செய்யும் விவசாயத்துக்கு காப்பீடு செய்திருக்கிறோம். இரவு நேரங்களில் மேய்ச்சலுக்கு வரும் மாடுகளை விரட்டுவதற்காக  ஊரில் இருந்து ஒவ்வொரு நாளும் இருபத்தைந்து முதல் ஐம்பது ஆட்கள் கமிட்டி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகிறோம்.

இதுவரைக்கும் பக்கத்து ஊர்களில் இதுபோன்ற பாதிப்புகளை கோயில் மாடுகள் செய்து வந்தன. தற்போது எங்கள் ஊருக்கும் அந்த மாடுகள் வந்து விவசாயத்தை அழிப்பதால் அவைகளிடம் இருந்து விவசாயத்தைக் காப்பற்றிக்கொடுங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறோம்” என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க