''அமெரிக்கா எச்சரிக்கை; பணிந்தது பாகிஸ்தான்..!'' பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது | Hafiz Saeed’s arrested again in pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2017)

கடைசி தொடர்பு:07:51 (01/12/2017)

''அமெரிக்கா எச்சரிக்கை; பணிந்தது பாகிஸ்தான்..!'' பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது

ஹபீஸ் சயீத்

கடல் வழியாக மும்பை வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரத் தாக்குதலை நடத்தினர். அந்த தாக்குதலில் 6 அமெரிக்கர் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த பயங்கரவாதச் செயலுக்கு மூளையாக செயல்பட்டது பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபீஸ் சயீத் என்று புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து அறிவித்தது. தற்போது ஜமாத்-உத்-தவா என்ற அமைப்பை நடத்திவரும் ஹபீஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.65 கோடி என்று விலை நிர்ணயித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிலும் ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிப்பு செய்துள்ளது. மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஹபீஸ் சயீத்தை சர்வதேசப் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. 

இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தும் பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் சுதந்திரமாக புழங்கி வந்ததை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன் டிரம்ப் கண்டித்தார். இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி வீட்டுக்காவல் போடப்பட்டு ஹபீஸ் சயீத் முழு கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டார். ஆனால், 10 மாதம் கடந்த நிலையில், சமீபத்தில் வீட்டு காவல் விலக்கி கொள்ளப்பட்டது.

பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை ஆத்திரம் கொள்ள வைத்தது. மேலும், பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்தியாவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. உடனே, ஹபீஸ் சயீத் கைதுசெய்யப்படவில்லை என்றால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் கடும் பாதிப்புகளை உருவாக்கும் என்று  அமெரிக்கா எச்சரித்தது. ஆனால், பாகிஸ்தான் தனது தரப்பு நியாயத்தை சொன்னது. அதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், 'தான் பயங்கரவாதி இல்லை. கறுப்புப் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டும்' என்று திடீரென்று ஹபீஸ் சயீத் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுவும் அமெரிக்காவை எரிச்சலடைய வைத்தது. இந்நிலையில், அமெரிக்கா கொடுத்த நேரடி அழுத்தத்தால் ஹபீஸ் சயீத் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க