Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரே நாளில் 6 அடி உயர்ந்தது முல்லைப்பெரியாறு அணை! விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் தண்ணீர் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்யும் அணையாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை. தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்தது போல அமையாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்நிலையில், தற்போது ஒகி புயல்காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6.20 அடி உயர்ந்துள்ளது. நேற்று வரை, 121 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 127.90 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் நேற்று வரை 773 கன அடியாக இருந்த அணை நீர்வரத்து, தற்போது 16,022 கன அடியாக உயர்ந்துள்ளது. இது மிகப்பெரிய அளவு. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1000 கன அடியில் இருந்து 1400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே நிலையில் அணைக்கு நீர் வரத்து இருந்தால் அணை 142 அடியை விரைவில் எட்டிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த மாதம் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட மூவர் குழு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement