சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதலாக ஆறு புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

நீதிபதி பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றுக்கு மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. அதில் தற்போது 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 21 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன்படி மாவட்ட நீதிபதிகள் பணியிடத்தில் இருந்துவரும் ஆறு பேர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து மத்திய சட்டத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி எஸ். ரமாதிலகம், ஆர். தரணி, ஆர். ராஜமாணிக்கம்,  டி. கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகிய ஆறு பேரை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்தது. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று காலை  பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இவர்கள் 6 பேரும் நீதிபதியாக பதவியேற்க உள்ளதை அடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும். இதையடுத்து, பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 11 ஆக உயருகின்றது. இன்னும் 15 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!