57 கோடி ரூபாய் வரிவசூல் பாக்கி; தூங்கும் காஞ்சிபுரம் நகராட்சி!

காஞ்சிபுரம் நகராட்சியில் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி என பொதுமக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய வரிகளை வசூலிக்காமல் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால் வரி வசூல் செய்ய வேண்டிய நிலுவைத்தொகை 57 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது என நகராட்சி நலம் விரும்பிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் நகராட்சி

காஞ்சிபுரம் நகராட்சியில் சுமார் ஐம்பதாயிரம் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 2.5 லட்சம் மக்கள் வசித்துவருகின்றனர். நகராட்சிப் பகுதியில் குடியிருப்பவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டு வரி, குடிநீர் வரி, பாதாளச் சாக்கடை இணைப்பு வரி, தனியார் வணிக வரி உள்ளிட்ட வரிகளை வசூல்செய்து நகராட்சியின் கட்டமைப்பை உயர்த்த வேண்டும். இந்த நிலையில் வீட்டு வரி 32.75 லட்சம் ரூபாய், காலி மனை வரி 1.47 லட்சம் ரூபாய், தொழில் வரி 3.35 லட்சம் ரூபாய், குடிநீர் வரி 7.78 லட்சம் ரூபாய், கடை வாடகை 4.24 லட்சம் ரூபாய், பாதாளச் சாக்கடை 8.25 லட்சம் ரூபாய் என மொத்தம் 57.87 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்படாமல் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வரிவசூல் செய்வதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காஞ்சிபுரம் நகராட்சியிலும், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் உள்ள நகராட்சி ஆணையர் சர்தார் வீடுகள் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வரி வசூல் செய்வதில் நகராட்சி மெத்தனம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!