வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (01/12/2017)

கடைசி தொடர்பு:14:05 (01/12/2017)

தூத்துக்குடியில் வீசிய பலத்த காற்றால் 23 நாட்டுப்படகுகள் சேதம்

தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழையாலும், பலத்த காற்றாலும் திரேஸ்புரம் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 23 நாட்டுப்படகுகள் சேதமடைந்துள்ளன.

boats are dameged by strong winds

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக மாறியதால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தை அடுத்து தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கடற்கரைப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கடந்த 2 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதேபோல தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்திலும் 256 விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் தொடர்ந்து வீசிய பலத்த காற்றால் திரேஸ்புரம் கடற்கரைப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தூக்கி வீசப்பட்டும், ஒன்றோடொன்று மோதியும் 23 நாட்டுப்படகுகள் சேதமாயின. இதில் 2 நாட்டுப்படகுகள் கடலுக்குள் மூழ்கியது.

boats are damadged by strong winds

இந்த கனமழையால் வேம்பார் முதல் திருச்செந்தூர் வரையிலான சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பிலுள்ள உப்பளங்களும் மூழ்கின. கடந்த 2 நாளில் மாவட்டம் முழுவதும் 38 மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்ததாகவும், 63 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததாகவும்,  23 வீடுகள் பகுதி அளவிலும், 11 வீடுகள் முழுமையாகவும் இடிந்து சேதமடைந்துள்ளன என  பேரிடர் மேலாண்மை குழுவினரின் கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க