``மக்களை மீட்க எங்களுக்குப் படகு வேண்டும்!” தீயணைப்புத் துறையினர் வேண்டுகோள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புறங்களையொட்டி ஏரிகள் அதிகம் இருப்பதால், ஏரிகள் உடையும்போது நகர்ப்புறங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சில ஆண்டுகளாகவே பருவமழையின்போது நகர்ப்பகுதிகளில் வெள்ளம் புகுந்து தீவுகள்போல ஆகின்றன. அப்போது வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் படகுகளில் மக்களை மீட்கும் நிலை உள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்பு, படகுகள் வெள்ளம்

மழைநீர் புகுந்த வீடுகளில் இருந்து கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள், சிறுவர்கள் ஆகியோர்களை வெளியேற்ற வேண்டுமானால் படகு அவசியமாகிறது. குறிப்பாக வரதராஜபுரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட நகரங்களில் லேசான மழை பெய்தாலே வெள்ளநீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் சாலைகளில் நீர் தேங்கிவிடும். சில இடங்களில் போதிய அளவு படகுகள் இல்லாததால் மீட்புப் பணியில் சுனக்கம் ஏற்படுகிறது. வெள்ளக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பதற்காக படகுகள் அவசியமாகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் ஆறு தீயணைப்பு நிலையங்களில் மட்டுமே சிறிய அளவிலான படகுகள் உள்ளன. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் மீட்புப் படகுகளை வழங்கவேண்டும் என தீயணைப்புத் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!