``நிவாரணப் பணிகளை முழு மூச்சாகத் துவங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் சிவபாலன் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று வைகோ திருப்பூர் வந்திருந்தார். 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பெருமளவு சேதத்தை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகிறார்கள். தமிழக அரசு தாமதிக்காமல் உடனடியாக நிவாரணப் பணிகளைத் துவக்க வேண்டும். அதற்கு வேண்டிய நிதி உதவியை மத்திய அரசு பாரபட்சமின்றி கொடுக்க வேண்டும்.

மேலும், ஜி.எஸ்.டி என்ற அதிர்ச்சி தருகின்ற நடவடிக்கையால் திருப்பூரின் பின்னலாடை வணிகம் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அள்ளித் தெளித்த அவசர கோலமாக இத்திட்டத்தை கொண்டுவந்து மீளமுடியாத அளவில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது மத்திய அரசு. உலக வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டு வந்து, இங்குள்ள ஒவ்வொரு குடிமகன்களின் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் தருவேன் என்று தேர்தல் நேரத்தில் மோடி அறிவித்ததும் வெறும் வாய்வீச்சாக போய்விட்டது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!