வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (01/12/2017)

கடைசி தொடர்பு:14:22 (01/12/2017)

புதிய கொடி... ஆர்ப்பரித்த தொண்டர்கள்... ஆர்.கே.நகரில் தினகரன் வேட்பு மனுத்தாக்கல்

dinakaran

இம்மாதம் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துவரும் நிலையில், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து தனித்துப் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் இன்று தேர்தல் ஆணையத்திடம் வேட்பு மனுவைத் தாக்கல்செய்தார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து நிற்கும் சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி, கலைக்கோட்டுதயத்தைக் களம் இறக்கியுள்ளது. சுயேட்சையாக டி.டி.வி.தினகரன் களத்தில் இறங்கியுள்ளார். மற்ற கட்சிகள் வேட்பாளர் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை.

இன்று மெரினா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய பின்னர் தினகரன், புதுக்கொடியுடன் தொண்டர்கள்  ஆர்ப்பரிப்புடன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்தார். பின்னர் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியிடம் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல்செய்தார் தினகரன்.  அண்ணா உருவம் இல்லாத கறுப்பு, வெள்ளை, சிவப்புக் கொடியுடன் தினகரன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தது அ.தி.மு.க-வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.