வெளியிடப்பட்ட நேரம்: 14:19 (01/12/2017)

கடைசி தொடர்பு:16:20 (01/12/2017)

ஜெயக்குமாருடன் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த மதுசூதனன்!

அ.தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல்செய்ய அமைச்சர் ஜெயக்குமாருடன் வந்தார் மதுசூதனன்.

மதுசூதனனுடன் ஜெயக்குமார்

அ.தி.மு.க-வின் ஆட்சி மன்றக் குழு நேற்று காலை சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் கூடியது. அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட கட்சி சார்பில் தாக்கல்செய்யப்பட்டிருந்த 27 விருப்ப மனுக்களை பரிசீலித்தது ஆட்சி மன்றக் குழு. அதன்படி எடுத்த ஒருமனதான முடிவின்படி கழக அவைத்தலைவர் மதுசூதனன் அ.தி.மு.க சார்பில்  இம்மாதம் 21-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அவர் அமைச்சர் ஜெயக்குமாருடன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருகை தந்துள்ளார். அப்போது, ஜெயக்குமார், மதுசூதனனின் கையைப் பிடித்து அழைத்து வந்தார்.

ஜெயக்குமாருக்கும் மதுசூதனனுக்கும் இடையே மோதல் போக்கு இருந்துவந்த நிலையில், இருவரும் ஒன்றாக வேட்பு மனுத்தாக்கல்  செய்ய வந்தது குறிப்பிடத்தக்கது.