காவு வாங்கும் கட்-அவுட் விவகாரம்! கோவை கலெக்டரின் பதில் என்ன தெரியுமா? | coimbatore collector shocking reply in encroached banner issue

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (01/12/2017)

கடைசி தொடர்பு:18:52 (01/12/2017)

காவு வாங்கும் கட்-அவுட் விவகாரம்! கோவை கலெக்டரின் பதில் என்ன தெரியுமா?

கோவை கலெக்டர்

நீதிமன்ற உத்தரவையும் மீறி கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காகப் பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் அ.தி.மு.க-வினர் கட்-அவுட் ஃப்ளெக்ஸ், பேனர்கள் அமைத்துவருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாகத் தி.மு.க வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் கொடுத்துள்ளனர்.

கோவையில் வரும் 3-ம்தேதி, அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதை முன்னிட்டு அ.தி.மு.க-வினர் கோவையின் பிரதான சாலையோரங்களில் வைத்திருக்கும் கட்-அவுட்களால், கோவை மக்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள். விதிமீறி வைக்கப்பட்ட கட்-அவுட்டுக்கு ஓர் இளைஞர் பலியாகியிருக்கிறார். இது தொடர்பாகத் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் தொடர்ந்த பொதுநல வழக்கில், ‘பொதுமக்களுக்கு இடையூறாகச் சாலைகளில் வைத்திருக்கும் கட்-அவுட்களை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பைக் கோவை மாவட்ட அதிகாரிகளோ அ.தி.மு.க நிர்வாகிகளோ கண்டுகொள்ளவில்லை. மாவட்ட ஆசியர் மந்தமாக இருப்பதைக் கண்டு மனம் நொந்துபோன கோவை  தி.மு.க வழக்கறிஞர்கள் சங்கத்தினர்,  நீதிமன்ற தீர்ப்பின் நகலோடு வந்து கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தனர். 

அப்போது நீதிமன்றத் தீர்ப்பைக் கோவை கலெக்டர் ஹரிஹரனிடம் முழுமையாக வாசித்துக்காட்டிய அவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக விதிகளை மீறி அ.தி.மு.க-வினர் பல இடங்களில் ஃப்ளெக்ஸ், பேனர்கள் வைத்திருக்கிறார்கள். அதை உடனடியாக அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஃப்ளெக்ஸ்கள் எதுவும் அகற்றப்படவில்லை. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் எல்லா ஃப்ளெக்ஸ்களையும் எடுத்துவிடுவார்கள் என்று பார்த்தால், மீண்டும் புதிதாக ஃப்ளெக்ஸ்களை வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதை நீங்கள் தடுக்காமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு. ஆகையால், உடனடியாக ஃப்ளெக்ஸ்களுக்கு கடிவாளம் போடுங்கள் என்று கலெக்டரிடம் தெரிவித்துள்ளார்கள். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட கலெக்டர், எனக்கு எல்லாம் தெரியும் நான் பாத்துக்குறேன் என்று பதில் சொல்லி அனுப்பினாராம்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க