வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (01/12/2017)

கடைசி தொடர்பு:17:48 (01/12/2017)

தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் ஆகியோரின் சொத்து மதிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க சார்பில் மருதுகணேஷும் அ.தி.மு.க சார்பில் மதுசூதனனும் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும் போட்டியிடுகின்றனர். மூன்று பேரும் ஒரே நாளில் இன்று தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். தற்போது அவர்களின் சொத்து மதிப்புகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

டி.டி.வி.தினகரனின் சொத்து மதிப்பு 74,17,807 ரூபாய். அசையும் சொத்து மமதிப்பு 16,73,799 ரூபாய். அசையா சொத்து மதிப்பு 57,44,008 ரூபாய்.

தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷின் மொத்த சொத்து மதிப்பு 12,57,845 ரூபாய். அசையும் சொத்து மதிப்பு  2,57,845 ரூபாய். அசையா சொத்து மதிப்பு 10,00,000 ரூபாய்.

மதுசூதனின் மொத்த சொத்து மதிப்பு ஒரு கோடியே 49 லட்சத்து 53 ஆயிரத்து 941. அசையும் சொத்து மதிப்பு 12,53,941 ரூபாய். அசையா சொத்து மதிப்பு 1,37,00,000 ரூபாய்.