சுகாதாரமின்றி காணப்படும் நத்தம் பேருந்து நிலையம்!

நத்தம் பேருந்து நிலையம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது நத்தம் தேர்வுநிலை பேரூராட்சி. இவ்வூரில் உள்ள பேருந்து நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். பல்வேறு கிராமங்களை நகரங்களுடன்  இணைக்கும் முக்கிய வாயிலாக உள்ளது இது. ஆனால், இந்தப் பேருந்து நிலையத்தின் பராமரிப்பு மோசமாகவே உள்ளது. இதில் அமைந்திருக்கும் பொதுக்கழிப்பிடத்தின் துர்நாற்றம் அப்பகுதியையே கடக்க முடியாதபடி செய்கிறது.

அதன் அருகில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் பேசினோம், "தினமும் இந்த நாற்றத்தில இருந்து ஒவ்வொரு நாளும் ரணமா இருக்கு சார். நாங்களும் எவ்வளவோ முறை சொல்லிப் பார்த்துட்டோம். ஆனா ஒண்ணும் நடவடிக்கை எடுக்கலை" என்றார். இந்தப் பேருந்து நிலையத்தை அகலப்படுத்துவதற்காக புதியதாக விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். ஆனால், அந்த இடத்தைப் பேருந்துகளுக்குப் பதில் தனியார் வாகனங்களே ஆக்கிரமித்துள்ளன. சிறு மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் தண்ணீர் தேங்கி கொசுவை உற்பத்தி செய்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மக்கள் நலன்காக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!