வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (02/12/2017)

கடைசி தொடர்பு:11:03 (02/12/2017)

``காங்கிரஸ் கட்சியை வாரிச் சுருட்டிய பா.ஜ.க.!'' உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் 16-ல் 14 மேயர் 

உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 16 மேயர் இடங்களில் 14 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியது. ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்று 8 மாதங்களுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெற்றுள்ள வெற்றிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வளர்ச்சிப் பணிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று மோடி, உ.பி மக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி மறக்க முடியாதது என்று பா.ஜ.க தேசியத்தலைவர் அமித்ஷா பராட்டி உள்ளார்.

Yogi

 

நாடாளுமன்றத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க அமோக வெற்றிபெற்றது. அதையடுத்து, கடந்த 8 மாதத்துக்கு முன்பு நடந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இப்போது உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் 16 மேயர் பதவிகளில் 14 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியது. இரண்டு இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது. அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்யப் போகவில்லை. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைக் காணாமல் ஆக்கிவிட்டோம் என்று உ.பி. பா.ஜ.க தலைவர்கள் கூறி இருக்கிறார்கள். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க ஜெயிக்கும்; அதுதான் எங்களின் அடுத்த இலக்கு'' என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, ‘‘நாட்டில் வளர்ச்சிக்கான அரசியல் வெற்றி பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியைத் தந்த உத்தரப்பிரதேச மக்களுக்கு நன்றி. முதல்வர் ஆதித்யநாத், கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். இந்த வெற்றி, மக்களின் மேம்பாட்டுக்காக இன்னும் கடினமாக உழைக்க நம்மை ஊக்குவிப்பதாக அமைகிறது’’ என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் பாராட்டு தெரிவித்துள்ளார். லக்னோ தொகுதியில் 1,31,356 ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றது. மிக முக்கியமான அயோத்தி, வாரணாசி மேயர் பதவிகளையும் பா.ஜ.க கைப்பற்றியது. காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் ராகுல்காந்தி எம்.பி-யாக உள்ள அமேதியை காங்கிரஸ் பறிகொடுத்தது. அங்கு பா.ஜ.க வெற்றி பெற்றது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க