கண்மாய்க்குள் இருந்த மின் கம்பம் சாய்ந்தது - அதிகாரிகள் விரைந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு!

 

மேலவளவு

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு கிராமத்தில் உள்ள குடிநீர் ஊரணியில் இருந்த மின்கம்பம் கடும் மழையால் சாய்ந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்தனர். உடனே வந்த அவர்கள் மின்கம்பத்தை அப்புறப்படுத்தி பலரின் உயிரைக் காப்பாற்றினர் . இதுதொடர்பாக சமூக ஆர்வலர் க.ரமேஷ் கூறுகையில் "எங்கள் ஊரில் இருக்கும் இந்த குடிநீர் கண்மாயில் இருந்த மின்கம்பம் சரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மின் ஊழியர்கள் வந்து அப்புறபடுத்திய பின் நிலைமை சீரானது . இந்தக் குடிநீர் ஊரணி பல சிற்றூருக்கு நீராதாரமாக விளங்குகிறது. மேலும், இந்த ஊரணியில் பிள்ளையார்கோயில் உள்ளதால், பெண்களும் குழந்தைகளும் அதிக அளவு வந்து செல்லும் இடமாகவும் உள்ளது. இங்கு திடீர் மழையால் மின்கம்பம் சேதமானது. அந்த சமயம் பொதுமக்கள் யாரும் வராததால் பலரது உயிரும் காப்பாற்றபட்டுள்ளது .

இந்த மின்கம்பம் பல மாதமாக சிதைந்த வண்ணம் இருந்தது.  அப்போதே இதைச் சரிசெய்திருந்தால் இப்படி நடந்திருக்காது . தற்போது தற்காலிகமாக ஊழியர்கள் சரிசெய்துள்ளனர். எனவே, இதை முழுமையாக சீர் செய்து மின் தேவையையும், பாதுகாப்பையும் முழுமையாக பூர்த்தி செய்யவேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!