வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (02/12/2017)

கடைசி தொடர்பு:10:37 (02/12/2017)

மிலாடி நபி: இஸ்லாமியர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு ஸ்டாலின் உள்ளிட்ட  அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

மிலாடி நபி

இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாடி நபி திருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி நபிகள் நாயத்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விசேஷ திருநாளில் “அன்பு, சகோதரத்துவம் நிரம்பிய நாட்டில் பன்முகத்தன்மையை போற்றிட மிலாது நபி நாளில் சபதம் ஏற்போம்” என தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

டி.டி.வி.தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில், “அனைவரது வாழ்விலும் அன்பு, அமைதி, வளம் எனும் ஒளி பரவ இறைவனை வேண்டி, கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடுள்ளார்.

மேலும், பிரதமர் மோடியும் தன் ட்விட்டர் பக்கத்தில், “மிலாடி நபி வாழ்த்துகள். நபிகள் நாயகத்தின் நீதி நெறிகளைப் பின்பற்றி நாட்டில் அமைதி நிலவட்டும்” என தெரிவித்துள்ளார்.