வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (02/12/2017)

கடைசி தொடர்பு:10:50 (02/12/2017)

தொடர்ந்து மிரட்டும் மழை... ஸ்தம்பித்தது நீலகிரி..!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீலகிரி மாவட்டம் ஸ்தம்பித்துள்ளது.

நீலகிரி

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் கடுமையான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல, ஏராளமான இடங்களில் மரங்களும் சரிந்துள்ளன. இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியே திருப்பிவிடப்பட்டுள்ளன. அதேபோல, மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில், மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், நீலகிரியில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீலகிரி

நீலகிரியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. நீலகிரிக்கு, கோவையில் உள்ள மக்கள் சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்து உதவி செய்துவருகின்றனர். கோவை மாவட்டத்திலும் கடுமையான மழை பெய்துவருகிறது. வெள்ளப் பெருக்கு காரணமாக, கோவை குற்றலாத்தில், மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க