வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (02/12/2017)

கடைசி தொடர்பு:13:50 (02/12/2017)

`குரூப் ஆஃப் டெத்' இல்லாத உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி!

லகக் கோப்பைக் கால்பந்துத் தொடரின் போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இந்த முறை, `குரூப் ஆஃப் டெத்' பிரிவு அமையாததால், லீக் ஆட்டங்கள் சுவாரஸ்யம் இழக்கலாம்.

பீலேவை முத்தமிடும் மரடோனா

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி 21 வது உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடங்குகிறது. போட்டியை நடத்தும் ரஷ்யாவைத் தவிர மற்ற 31 அணிகள் தகுதிச் சுற்று ஆட்டங்களில் விளையாடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. நட்சத்திர வீரர்கள் நிறைந்த நெதர்லாந்து, இத்தாலி அணிகள் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.

மாஸ்கோ நகரில் நேற்று குலுக்கல் முறையில் அணிகளுக்கான பிரிவு தேர்வு நடைபெற்றது. விழாவில் கால்பந்து ஜாம்பவான்கள் பீலே, மரடோனா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பங்கேற்க வந்த பீலேவை மரடோனா தலையில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். 2010-ம் ஆண்டில் இருவரும் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபட்டுவந்தனர். 

ரஷ்யா உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் ஆஃப் டெத் இல்லை. வழக்கமாக ஏதாவது ஒரு பிரிவில் பலம் வாய்ந்த 3 அல்லது 4 அணிகள் இடம் பிடிக்கும். அந்தப் பிரிவை `குரூப் ஆஃப் டெத்' என்பார்கள். இந்தப் பிரிவு ஆட்டங்கள் லீக் சுற்றின்போது அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். நெதர்லாந்து, இத்தாலி அணிகள்  உலகக் கோப்பைக்குத் தகுதி பெறாத நிலையில் குரூப் ஆஃப் டெத் பிரிவும் இல்லாதது சுவாரஸ்யத்தை இழக்கச் செய்துள்ளது. 

நடப்புச் சாம்பியன் ஜெர்மனி இடம் பெற்றுள்ள எஃப் பிரிவில் மெக்ஸிகோ, ஸ்வீடன், தென்கொரிய அணிகள் இடம் பெற்றுள்ளன. அட்டவணையில் இந்தப் பிரிவு மட்டும்தான் சற்று பலம் வாய்ந்த அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவாகத் தெரிகிறது. போட்டியை நடத்தும் ரஷ்யா முதல் ஆட்டத்தில் மாஸ்கோவில் சவுதி அரேபியாவை ஜூன் 14-ம் தேதி சந்திக்கிறது. இறுதி ஆட்டம் மாஸ்கோவில் உள்ள லுக்கினிக்கி ஸ்டேடியத்தில் ஜூலை 15-ம் தேதி நடைபெறுகிறது. 

எந்தப் பிரிவில் எந்த அணிகள்

‘ஏ’ : ரஷியா, உருகுவே, எகிப்து, சவுதி அரேபியா

‘பி’ : போர்ச்சுகல், ஸ்பெயின், ஈரான், மொராக்கோ

‘சி’: பிரான்ஸ், பெரு, டென்மார்க், ஆஸ்திரேலியா

‘டி’: அர்ஜென்டினா, குரோஷியா, ஐஸ்லாந்து, நைஜீரியா

‘இ’: பிரேசில், ஸ்விட்சர்லாந்து, கோஸ்டாரிகா, செர்பியா

‘எப்’: ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன், தென்கொரியா

‘ஜி’: பெல்ஜியம், இங்கிலாந்து, துனிஷியா, பனாமா

‘எச்’: போலந்து, கொலம்பியா, செனகல், ஜப்பான்

நீங்க எப்படி பீல் பண்றீங்க