Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`ரூ.25 கோடி ஒப்பந்தப் பணிக்காகக் கே.ஆர்.பி அணையின் ஷட்டர் உடைக்கப்பட்டதா?' - கொதிக்கும் விவசாயிகள்

கே.ஆர்.பி அணையில் கடந்த நவம்பர் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு முதலாவது ஷட்டர் உடைந்து அணையில் இருந்த தண்ணீர் மளமளவென வெளியேறியது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

அணையின் ஷட்டர் உடைந்ததற்கு மாவட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் முருக சுப்பரமணியம், கே.ஆர்.பி அணை ஷட்டர் உடைந்ததற்காகக் காரணத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில், `ஷட்டர் உடைந்ததற்கு பெங்களூருவில் இருந்துவரும் கழிவு நீர் முக்கியக் காரணம் என்றும், கழிவு நீரால் அணையின் ஷட்டர் வெகுவாகப் பாதிப்படைந்து, வலுவிழந்து உடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாலசுப்ரமணியம்

ஆனால், விவசாயச் சங்கத் தலைவர் ராமகவுண்டர் நம்மிடம் பேசுகையில், `கே.ஆர்.பி அணை ஷட்டர் உடைந்ததில் பெரிய சதி நடந்துள்ளது. அணை ஷட்டர் உடைந்ததில் இரண்டு வகையான சந்தேகங்கள் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளன. 

பெங்களூரு கழிவு நீர் சுத்திகரிப்பு

முதலாவதாக, பொதுப்பணித்துறை நீர்வள தலைமைப் பொறியாளர் முருக சுப்பிரமணியம் அறிக்கையில் பெங்களூருவிலிருந்து வரும் கழிவு நீர் அரிப்பால் பாதிக்கப்பட்டடு ஷட்டர் உடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். பொறியாளரின் அந்த அறிக்கை தவறானது. காரணம், பெங்களூரு கழிவு நீரை அப்படியே தென்பெண்ணை ஆற்றில் கலப்பதில்லை. மாறாகக் கழிவு நீரைச் சுத்திகரித்து திடக்கழிவுகளைப் பிரித்து எடுத்துவிட்டுத்தான் தென்பெண்ணை ஆற்றில் கலக்கின்றனர். பிறகு, எப்படி அணையின் ஷட்டரில் அரிப்பு ஏற்படும். அதுவும் ரூ.1.72 கோடியில் அணையின் ஷட்டருக்கு துருப்பிடிக்காத பெயின்ட் அடித்த பிறகு கழிவுநீரால் அது எப்படி பாதிக்கப்படும்?  

இராமகவுண்டர்

இரண்டாவதாக, தென்பெண்ணை ஆற்றின் இடது மற்றும் வலது புற கால்வாய்களைத் தூர்வார ரூ.25 கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கால்வாய் தூர்வாரும் பணியை இந்த ஆண்டுக்குள் செய்து முடிக்க வேண்டும், இல்லையென்றால் நிதியைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பொதுப்பணித்துறை திட்ட இயக்குநரிடமிருந்து நெருக்கடி வந்துள்ளது. அணையில் நீர் நிரம்பியுள்ளதால், இரண்டாம் சாகுபடி செய்யத் தண்ணீர் விட வேண்டிய கட்டாயத்தில் மாவட்ட நிர்வாகம் உள்ளது. இரண்டாம் போக சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டால் தென்பெண்ணை ஆற்றின் கால்வாய் தூர்வார முடியாது. இதனால் திட்டமிட்டு அணையின் ஷட்டரை, ரூ.25 கோடி ஒப்பந்த பணிக்காக அணையின் ஏன் உடைத்து இருக்கக் கூடாது. அதுவும் நீர்வளச் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் பணி நிறைவு பெறும் நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கே.ஆர்.பி அணையில் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தபோதுகூட அணையின் ஷட்டர் உறுதியாகத் தாங்கி நின்றது. ஏன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புகூட 16 ஆயிரம் அடி கனஅடி தண்ணீர் வந்தபோது ஷட்டர் உறுதியாகவே இருந்தது. ஆனால், வெறும் 350 கனஅடி தண்ணீர் வெளியேறிக்கொண்டிருந்தபோது, ஷட்டர் உடைந்துள்ளது என்றால் அதன் ரகசியம் என்ன என்று கேள்வியெழுப்புகிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement