மீனவர்கள் மீட்பு விவகாரம்... மத்திய அமைச்சரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

கன்னியாகுமரி மீனவர்கள் மீட்புப்பணி விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியுள்ளார். 


வங்கக் கடலில் உருவான ஒகி புயல் காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. மேலும், புயலுக்கு முன்னதாகக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டவர்கள் கடலில் சிக்கிக்கொண்டுள்ளனர். இதனால், கன்னியாகுமரி மக்கள் பெரும் பதற்றம் அடைந்துள்ளனர். மீனவர்களை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். மீனவர்கள் மீட்புப் பணியில் அதிக அளவு கடற்படை ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!