வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (02/12/2017)

கடைசி தொடர்பு:18:02 (02/12/2017)

மாட்டிறைச்சி தடை அறிவிப்பாணையைப் திரும்பப் பெற்ற மத்திய அரசு!

மாட்டிறைச்சி தொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்பப் பெற்றது. 


இறைச்சிக்காகப் பசு மாடு, காளை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளைக் கொல்லக் கூடாது என்று மத்திய அரசு மே மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாட்டிறைச்சித் தொடர்பான அறிவிப்பாணையில் திருத்தம் கொண்டுவர உள்ளதாக மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாட்டிறைச்சி தொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.