வெளியிடப்பட்ட நேரம்: 19:38 (02/12/2017)

கடைசி தொடர்பு:20:02 (02/12/2017)

’இங்க ஒரே ஒரு ரூல்தான்!’ - மிரட்டும் ’அருவி’ ட்ரெய்லர்

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அருவி'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு அமைந்திருக்கிறது. புது முகம் அதிதி பாலன் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வைரலான நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. 

 

அருவி

திரைக்கு வருவதற்கு முன்பே பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்துள்ள அருவி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் படம் குறித்து பாசிட்டிவான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர். இதனால் ரசிகர்களிடம் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க