போலீஸ் காவலில் இறந்தவர்கள் உடல் மறுபிரேத பரிசோதனை! போராட்டத்தைக் கைவிட்ட ஊர்மக்கள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கடந்த 20-ம் தேதி போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்ததாக சொல்லப்படும் நடுசூரன்குடியை சேர்ந்த ஞானசேகர், திலகராஜ் ஆகிய இருவரின் உடல்களை வாங்காமல் உறவினர்களும், ஊர்காரர்களும் போராட்டம் நடத்தி வந்தனர்.

போலீஸார் துரத்தும்போது, மின்வேலியில் அவர்கள் சிக்கி இறந்ததாக  மின்வேலி அமைத்த இரு விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் குற்றத்தை மறைக்கவே போலீஸார் பொய்யான கதையைக் கூறிவருவதாக நடுசூரன்குடி மக்கள் புகார் கூறிவந்தனர்.

பத்து நாட்களுக்குப்பின்

சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மரணமடைந்த இருவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், அவர்களது உடலை வாங்காமல் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இந்தநிலையில் சோஷியல் ஜஸ்டிஸ் அமைப்பை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நீதிமன்றத்தில் முறையிட்டு இருவரின் உடலை மறு பிரேதப்பரிசோதனை செய்ய உத்தரவு பெற்றார். அந்த அடிப்படையில் இன்று மறு பிரேதப்பரிசோதனை நடந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின் இந்த வழக்கில் உண்மை தெரியும் என்று சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!