ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு கண்தானம் செய்த மதுரை ரசிகர்கள்!

நடிகர் ரஜினியின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ரஜினி ரசிகர்கள் 250-க்கும் மேற்பட்டோர் கண் தானம் செய்தனர்.

 

rajini

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் ஏழை ,எளியவர்களுக்கு இலவச கண் ஆபரேஷன் செய்யும் முகாம் மற்றும் ரஜினி ரசிகர்கள் கண்தானம் வழங்கும் முகாம் மதுரையில் நடைபெற்றது. மதுரை மஹபூப்பாளையம் ஒய்.எம்.சி.ஏ மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளியில் மதுரை ரஜினி ரசிகர்கள் ரஜினி மாரி,அழகர், பால்பாண்டி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்தான முகாமில், மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர் ஜாபர், ராமநாதபுரம் ரஜினி மன்ற செயலாளர் பால நமச்சிவாயம் ஆகியோர் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் தங்களது கண்களை தானமாக வழங்கும் ஒப்புதலை ஆவணமாக வழங்கினர் . மேலும், வாசன் கண் மருத்துவமனை சார்பில் முகாமில் பங்கேற்ற மருத்துவக் குழுவினர் முகாமில் கண்புரை நோய், கண் ஒளி குறைவு, கண்ணில் நீர் கோர்த்தல் உள்ளிட்ட நோய்களை கண்டறிந்து ஆதரவற்ற ஏழை ,எளியவர்களுக்கும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இலவசமாக கண் அறுவை சிகிக்சை செய்ய ஏற்பாடு செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!