திருப்பூரில் துவங்கியது அரசு பொருட்காட்சி!

தமிழகத்தின் தற்போதைய அ.தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கும் வகையில்திருப்பூர் மாநகரில் "அரசு சாதனை விளக்கப் பொருட்காட்சி" துவங்கியிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற இருக்கும் இந்த அரசு பொருட்காட்சியானது  தொடர்ந்து 45 நாட்கள் வரை நடைபெற இருக்கிறது.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை 6 மணிக்கு நடந்த துவக்க விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பழனிசாமி மற்றும் திருப்பூர் மாவட்ட எம்.எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொருட்காட்சி நடைபெறும் வளாகத்தில், தமிழக அரசின் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டன. மேலும் மாவட்டத்தில் உள்ள 800 பயனாளிகளுக்கு சுமார் ரூ.2.97 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!