திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற அனுமதி கேட்டு இந்து இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது தீபமேற்ற அனுமதி கோரி திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருப்பரங்குன்றம்

போலீஸ் தடையை மீறி திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவோம் என்று இந்து முன்னணியும், இந்து மக்கள் கட்சியும் அறிவித்திருந்தன.  இதனால் நேற்று அங்கு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தியிருந்தது.

அந்தப் பகுதியில் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதேபோல்இந்து மக்கள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசும்போது, " பாரம்பர்ய முறையில் மலையின் மீது நாங்கள் சென்று தீபம் ஏற்றுவதில் எத்தனை பிரச்னைகள் வந்தாலும், அடுத்த முறை தீபம் எற்றியே தீருவோம்.  திருப்பரங்குன்றத்தை புனிதத்தலமாக அறிவிக்க வேண்டும். வேணுகோபால் கமிட்டி அறிக்கையின் பரிந்துரைப்படி குடியிருப்பு பகுதிகளில் ஜெபக்கூடம் இருக்கக் கூடாது. அதனால்  உடனே இங்குள்ள ஜெபக்கூடத்தை அகற்ற வேண்டும். தற்பொழுது தீபம் ஏற்றும் இடம் இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் இடமாகும். ஆகையால் மலையின் மீது தீபம் ஏற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!