ஜெயலலிதாவின் வாரிசு யார்? செல்லூர் ராஜு பதில்

ஜெயலலிதாவின் வாரிசு யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில் அளித்தார். 

ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள்

மதுரையில் சமூக நலத்துறை சார்பில் நடந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார். அவரிடம் தினகரன் தொப்பி சின்னம் கேட்பது, ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வரும் பெங்களூர் அம்ருதா பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது  செல்லூர்ராஜு வழக்கம்போல் அதிரடியாக பேசினார், 

"அ.தி.மு.க எப்போதும் வாகை சூடிய இயக்கம். இப்போது இரட்டை இலை சின்னமும் கிடைத்துள்ளது, தொப்பி சின்னம் யாருக்கு கிடைத்தாலும் அது பற்றி கவலையில்லை. அ.தி.மு.க அமோக வெற்றி பெறும். எங்கள் வேட்பாளர் மதுசூதனன் படித்தவர், பண்பாளர், திறமை மிக்கவர், அந்த தொகுதியில் செல்வாக்கு மிக்கவர். எங்கள் கட்சியின் அவைத்தலைவராக உள்ளார். அவர் அமோக வெற்றி பெறுவார்.

அம்ருதா என்பவர் அவதூறு பரப்பி வருகிறார். விளம்பரத்துக்காகவும், சிலரின் அரசியல் தூண்டுதலாலும் தன்னை எங்கள் அம்மாவின் மகள் என்று சொல்லி வருகிறார். ஜெயலலிதாவுக்கு ஒன்றரைக் கோடி தொண்டர்கள்தான் வாரிசு. வேறு யாரும் வாரிசு அல்ல" என்றார் செல்லூர் ராஜு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!