வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (03/12/2017)

கடைசி தொடர்பு:05:30 (03/12/2017)

குஜராத் முதல்வரை நெருங்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி! ராகுல் கண்டனம்

குஜராத்தில் வதோராவில் உள்ள கேவ்டியா காலனியில் முதலமைச்சர் விஜய் ரூபானி பங்கேற்ற  பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ரூபாலி தாத்வி என்ற பெண் முதல்வர் விஜய் ரூபானியை அணுகி மனு அளிக்க முயன்றார். இதைப் பார்த்த  பெண் போலீசார் அவரை முதலமைச்சரை நெருங்க விடாமல் தடுத்து தர தரவென இழுத்துச் சென்றனர். போலீசார் இழுத்துச் சென்ற பெண், நாட்டுக்காக உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் அசோக் தாத்வியின் மகள் ஆவார். 

குஜராத்தில் இழுத்துச் செல்லப்பட்டத் தியாகியின் மகள்

சில ஆண்டுகளுக்கு முன், எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றிய அசோன் தாத்வி சண்டையில் உயிரிழந்தார். அவரின் குடும்பத்தாருக்கு  அறிவிக்கப்பட்ட நிலம் இன்னும்  வழங்கப்படவில்லை. நிலம் பெற அசோக் தாத்வியின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக போராடி வந்தாலும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் அறிவித்த நிலத்தை வழங்குமாறு மனு அளிக்க முதல்வர் விஜய் ரூபானியை ரூபாலி நெருங்கியிருக்கிறார். 

வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தின் போது, மக்களிடையே அமர்ந்திருந்த ரூபாலி  திடீரென்று மேடையை நோக்கி ஓடினார். 'நான் முதல்வரை சந்திக்க வேண்டும்' என்றும் கோஷமிட்டார். பின்னாலேயே ஓடிய பெண் போலீசார், அவரை மறித்து இழுத்துச் சென்றனர். முதலமைச்சரின் கண் முன்னே இந்த சம்பவம் நடந்தது. கூட்டத்தில் பேசிய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, நிகழ்ச்சி முடிந்ததும் அந்தப் பெண்ணிடம் பேசுவதாக அறிவித்தார். 

ரூபாலியை போலீசார் இழுத்து செல்லும் வீடியோ காட்சியை ட்விட்டரில் வெளியிட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ''நாட்டுக்காக உயிர் விட்டவரின் குடும்பத்தை நடத்தும் லட்சணம் இதுதானா... வெட்கக் கேடான சம்பவம் இது... பாரதிய ஜனதா கட்சியின் அட்டூழியம் உச்சக்கட்டத்தில் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க