வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (03/12/2017)

கடைசி தொடர்பு:10:53 (03/12/2017)

டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது சென்னை திரைப்பட விழா

சென்னை திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட விழா

சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடப்பது வழக்கம். இந்த வகையில் 2017-ம் ஆண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் திரைப்பட விழாவை என்.எஃப்.டி.சி மற்றும் இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. சிறந்த தமிழ்த் திரைப்படங்களுடன் சர்வதேச மொழிப் படங்களும் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.

சென்னையில் சத்யம் திரையரங்கம், ரஷ்ய கலாச்சார மையம், தேவி, தேவிபாலா போன்ற திரையரங்குகளில் திரைப்பட விழாக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இந்த திரைப்பட விழாவின் துவக்க விழா வருகிற 14-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 6 மணி அளவில் நடக்க உள்ளது. விழாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி இரண்டு எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.