1,154 மீனவர்கள் மீட்பு..! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 1,154 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரள மீனவர்கள் ஒகி புயலின் காரணமாக கடலில் சிக்கியுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கைவிடுத்தனர். தமிழகம் மற்றும் கேரள அரசு மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றன. இந்திய கடற்படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்தநிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டர் பதிவில், '89 படகுகளில் இருந்த 1,154 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பெரும்பாலும் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் இலடச்த் தீவு, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா துறைமுகங்களில் பாதுகாப்பாக உள்ளனர்' என்று பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!