வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (03/12/2017)

கடைசி தொடர்பு:15:29 (03/12/2017)

10 மாதக் குழந்தை கடத்தல்..! விரைந்து மீட்ட காவல்துறையினர்

சென்னை, பூக்கடைப் பகுதியில் நேற்றிரவு கடத்தப்பட்ட 10 மாதக் குழந்தையை காவல்துறையினர் விரைந்து மீட்டனர். 

கோப்புப்படம்


சென்னை, பூக்கடைப் பகுதியில் வசித்துவருபவர்கள் ஆனந்தன்-லதா தம்பதியினர். அவர்கள் தினக்கூலிகளாக இருந்துவருகின்றனர். அவர்களுக்கு கபிலன் என்ற 10 மாதக் குழந்தை உள்ளது. நேற்று நள்ளிரவில் கபிலன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இதுகுறித்து பூக்கடை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், இன்று மதியம் குழந்தையை கண்ணகி நகர் பகுதியிலிருந்து பத்திரமாக மீட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சபியா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.