வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (03/12/2017)

கடைசி தொடர்பு:17:00 (03/12/2017)

விழிஞ்சம் துறைமுகப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்!

விழிஞ்சம் துறைமுகப்பகுதியில் கரை விழிஞ்சம் துறைமுகப்பகுதியில் கரை  ஒதுங்கிய மீனவர்களின் உடல்களில், தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஜூடுவின் உடல் அடையாளம் கண்டு மீட்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக தங்கு கடல் மீன்பிடிப்பிற்கு தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வருவதால் தங்களது குடும்ப பொருளாதார சூழ்நிலையால் பிறமாவட்டங்களுக்குச் சென்று தங்குகடலில் மீன் பிடித் தொழிலுக்குச் செல்கின்றனர். தூத்துக்குடி மீனவர் காலனியைச் சேர்ந்த ஜோசப்,  ரவீந்திரன், கினிஸ்டன் ஜூடு மற்றும் அவரது மகன் பாரத் ஆகிய 5 பேரும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் தங்கு கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றனர். அவர்கள் சென்ற படகு,  ஒகி புயலின் சீற்றத்தால் கரை திரும்ப முடியாமல் கடந்த  நவம்பர் 30-ம் தேதி  அதிகாலையில் கடலில் தத்தளித்து கவிழ்ந்தது.  

இதில், மாயமான மீனவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகப்பகுதியில் கரைஒதுங்கிய மீனவர்களின் உடல்களில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜூடுவின் உடல் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மீனவர்களை தேடும் பணி நடை பெற்று வருகிறது. இதனால், தூத்துக்குடி, மீனவர்  காலனியில் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க