களமிறக்கப்பட்ட பள்ளி வாகனங்கள்: புதிய சர்ச்சையில் கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, பள்ளி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பள்ளி வாகனம்

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடந்துவரும் இந்த விழா, மற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களைப் போலல்லாமல் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த விழாவுக்காக பள்ளி மற்றும் கல்லூரிப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து வர தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வேன்கள், பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளி வாகனம்

விழா நடக்கும், வ.உ.சி மைதானம் அருகே ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்களைக் காண முடிந்தது. ஏற்கெனவே, பள்ளி மாணவர்களை அரசு விழாவுக்கு அழைத்துச் சென்று சர்ச்சையில் சிக்கிய தமிழக அரசு, தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். அரசு விழாவுக்குப் பள்ளி, கல்லூரி வாகனங்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்று ம.தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!