விஷால் வந்தாலும், எவர் வந்தாலும், இரட்டை இலை ஜெயிக்கும்..! வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் உட்பட யார் போட்டியிட்டாலும் இரட்டை இலைச் சின்னத்தில் அ.தி.மு.க வெற்றி பெறுவது உறுதி என்று அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். 

ராஜன் செல்லப்பா

 மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் கால்வாய் தூர் வாரும் பணிகளை ஆய்வுசெய்தபின் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``மதுரை மேலமடை பகுதியிலும் குருவிக்காரன் சாலைப் பகுதியிலும் மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அதன் திட்ட மதிப்பீடு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் 6 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலைகள் மராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகிறது. மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட சாத்தையாறு அணை கால்வாய் தூர் வாரப்பட்டு வருகிறது. இதுபோல் மதுரையில் உள்ள அனைத்துக் கால்வாய்களையும் வாரம் ஒரு நாள் மாநகராட்சி பணியாளர்கள் ஜே.சி.பி உரிமையாளர்கள் சங்கத்தினரும் இணைந்து கால்வாய் தூர்வாரும் பணியை செய்துவருகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் விஷால் உள்பட யார் போட்டியிட்டாலும் இரட்டை இலைச் சின்னத்தில் அ.தி.மு.க.வெற்றி பெறுவது உறுதி'' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!