வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (03/12/2017)

கடைசி தொடர்பு:09:46 (04/12/2017)

’ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பி.எஸ். ஆய்வு’

ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள  கன்னியாகுமரி மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று நேரில் ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அதிகாரிகள் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வுசெய்து மின்கம்பங்களை அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.கடலில் காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கடலோரப் பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் முழு வீச்சில் வேகமாக  ஈடுபட்டுவருகின்றனர்.

முழுவதுமாக சேதமடைந்த பகுதிகளுக்கு ஏற்ப சேதங்களை மாவட்ட ஆட்சியர் கணக்கீடு செய்துவருகிறார். அந்த கணக்கீட்டுப் பணிகள் முடிந்தவுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே உரிய இழப்பீடு வழங்கப்படும்’ என்றார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பெய்த கனமழையால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக மாவட்டம் முழுவதும் மின்கம்பங்கள் சாய்ந்திருப்பதால், மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். மேலும், கனமழையால் வாழை, ரப்பர் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க