வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (03/12/2017)

கடைசி தொடர்பு:09:44 (04/12/2017)

தீம் வைத்தும் ஸ்டாம்ப், நாணயம் சேகரிக்கலாம் - இது புது டிரெண்டிங்

ஸ்டாம்ப்

பொதுவாக நாணயங்கள் தபால் தலைகள் சேகரிப்பது பலருக்கும் பொழுதுபோக்கு. இவர்கள் பொதுவாக தங்களுக்கு கிடைக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்களை சேகரிப்பர். இன்றையக் காலத்தில் தீம்களை அடிப்படையாகக் கொண்டு நாணயங்கள் சேகரிப்பது டிரெண்டிங் ஆக உள்ளது. முதலில் இந்த நாணயம் சேகரிப்பாளர்கள் தங்களுக்கு ஏற்ற தீம்களை நிர்ணயித்துக் கொள்கின்றனர். பிறகு அந்தத் தீம்களுக்கு ஏற்ப நாணயங்கள் சேகரிக்கின்றனர். விலங்குகள், பறவைகள், தலைவர்கள், மன்னர்கள் என வெவ்வேறு தீம்களில் நாணயங்கள் சேகரிக்கப்படுகின்றனர். இவ்வாறு புதுப் புது தீம்களில் நாணயங்கள் சேகரிப்பது புதுமையாகவும், ஸ்வாரஸ்யமாகவும் உள்ளது என்கிறார். இருபத்து ஒன்பது வருடங்களாக நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபட்டிருப்பவரும் மதுரை தபால்தலை மற்றும் நாணயம் சேகரிப்பாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான துரைவிஜய் பாண்டியன், 'நான் எனது பத்து வயதில் எனது சேகரிப்புப் பயணத்தை தொடங்கினேன். சிங்கப்பூர், ஜப்பான், சீனா, அரேபியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த நாணயங்களையும், தபால் தலைகளையும் சேகரித்து வைத்துள்ளேன்.

ஸ்டாம்ப்

 

ஆனால், தீம்கள் வைத்து நாணயங்கள் சேகரிப்பது மிகுந்த ஸ்வாரஸ்யமாக உள்ளது. இன்றைய தலைமுறையினர் நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இன்றைய இளைஞர்கள் நாணயங்கள் சேகரிப்பதற்கு பல எளிய வழிகள் உள்ளன. மேலும், இதுவே நம்முடைய கலாசாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கும் வழி என்கிறார். மேலும், இவர் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்காக பல அரசு அருங்காட்சியகங்களில் அவரது சேகரிப்பை பார்வைக்கு வைத்து நாணயம் சேகரிப்புகுறித்த விழிப்பு உணர்வும் ஏற்படுத்திவருகிறார்.