அவினாசி அருகே அரசுப் பேருந்து விபத்து - இருவர் மரணம், 30 பேர் படுகாயம்..!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 2 பேர் மரணமடைந்துள்ளனர். 30 பேர் வரை படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி - அன்னூர் செல்லும் நெடுஞ்சாலையில் இன்று  மதியம் 1 மணி அளவில் அரசுப் பேருந்து ஒன்று சென்றது. அப்போது ஆட்டையாம்பாளையம் நவகிரி மஹால் என்ற இடத்தின் அருகே உள்ள பாலத்தைப் பேருந்து கடக்கும்போது, எதிர்பாராத விதமாக பாலத்தின் இடதுபுறம் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணித்த சுண்டப்பன் என்ற முதியவரும், கனகராஜ் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 30 பயணிகள் வரை படுகாயமடைந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அவினாசி காவல்துறையினரும் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம்குறித்து அவினாசி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!