வெளியிடப்பட்ட நேரம்: 00:45 (04/12/2017)

கடைசி தொடர்பு:12:39 (04/12/2017)

`மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது' - நிர்மலா சீதாராமன் தகவல்

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஒகி புயலின் காரணமாகக் கடலில் சிக்கியுள்ளனர்.  அவர்களை மீட்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கைவிடுத்தனர். தமிழகம் மற்றும் கேரள அரசு மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றன. இந்திய கடற்படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார், ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாரமன்

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், `ஜி.பி.எஸ் கருவிமூலம் மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. 100 ஆண்டுகளில் நடந்திராத சம்பவம் தற்போது நடந்திருப்பது வருத்தத்துக்குரியது. வெளிநாட்டிலிருந்து வந்த கப்பல்கள், 36 மீனவர்களைக் காப்பாற்றியுள்ளனர். 29 மற்றும் 30-ம் தேதிகளில், மாநில அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. மருத்தவ வசதிகள் அடங்கிய கப்பல்களைக்கொண்டு மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது' என்று தெரிவித்தார்.