வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (04/12/2017)

கடைசி தொடர்பு:11:05 (04/12/2017)

தி.மு.க வெற்றியை யாராலும் முறியடிக்க முடியாது..! வைகோ சூளுரை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெறுவதை எந்தச் சக்தியாலும் முறியடிக்க முடியாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மருதுகணேஷூக்கு ஆதரவு அளிப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேற்று அறிவித்தார். இந்தநிலையில், மருதுகணேஷ், ம.தி.மு.க தலைமையகத்துக்குச் சென்று வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய வைகோ, 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க-வின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். இந்தத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெறுவதை எந்தச் சக்தியாலும் முறியடிக்க முடியாது. தி.மு.க-வின் வெற்றிக்கு ஆர்.கே.நகர் தேர்தல் நுழைவு வாயிலாக அமையும். வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறவேண்டும்' என்று தெரிவித்தார்.