வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (04/12/2017)

கடைசி தொடர்பு:13:20 (04/12/2017)

மீனவர்களைக் கணக்கெடுக்கும் பணியில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..! அமைச்சர் உதயகுமார் தகவல்

காணாமல்போன மீனவர்களைக் கணக்கெடுக்கும் பணியில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 


ஒகி புயல் பாதிப்பு மீட்புப் பணிகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், ``தமிழக அரசு தந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் விசைப்படகு மீனவர்கள் கரையில் தங்கிவிட்டனர். 100 ஆண்டுகளில் இல்லாத சூறைக்காற்று இம்முறை வீசியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பைத் துண்டித்ததால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. காணாமல்போன மீனவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறவேண்டும் என்ற எண்ணம் இல்லை.

மீனவர்களை மீட்கும் பணி நிறைவடைந்த பின்னரே, எண்ணிக்கைகுறித்துக் கூறமுடியும். காணாமல்போன மீனவர்களைக் கணக்கெடுக்கும் பணியில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மீனவக் கிராமத்துக்கும் சென்று மீனவர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது'' என்றார்.