வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (04/12/2017)

கடைசி தொடர்பு:15:00 (04/12/2017)

மர்மமான முறையில் மாணவன் மரணம்: விசாரணை கோரும் பெற்றோர்

ராமநாதபுரம் அருகே, மாணவனின் இறப்புக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் அருகே உள்ளது வீரபாண்டிவலசை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் விக்னேஷ், ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தான். இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன், விக்னேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்துள்ளான்.  இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ராமநாதபுரம் மாணவர் விக்னேஷின் தாய்

 முன் விரோதம் காரணமாகத் தனது ஊரைச் சேர்ந்த சிலரால்  தனது மகன் விக்னேஷ் கொலைசெய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும், இதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் விக்‌னேஷின் தந்தை செல்வராஜ் மற்றும் உறவினர்கள் மனு அளித்தனர்.