வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (04/12/2017)

கடைசி தொடர்பு:14:40 (04/12/2017)

மீனவர்கள் மீட்புப் பணியில் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்த வேண்டும்..! அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

'இஸ்ரோவின் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி, காணாமல்போன மீனவர்களைத் தேடவேண்டும்' என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


ஒகி புயலுக்கு முன்னதாக கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கக்கோரி, மூன்று நாள்களுக்கும் மேலாக கன்னியாகுமரியில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், அரசுக்குப் புதிய சில கோரிக்கைகளை மீனவர்கள் விடுத்துள்ளனர். அவர்கள், 'ஒகி புயலால் பாதிப்பட்டு 1,500-க்கும் மேற்பட்ட கன்னியாகுமரி மற்றும் கேரளவைச் சேர்ந்த இந்திய ஆழ்கடல் மீனவர்கள் கரை திரும்பாத நிலையில், போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

மேலும், மீட்பு நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட மீனவர்களைப் பயன்படுத்தவேண்டும்.  ISRO நிறுவனத்தின் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி, தேடுதல் வேட்டையை நடத்த வேண்டும். ஒகி புயலால் 1,500-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீனவர்கள் 5 நாள்கள் ஆகியும் இதுவரை மீட்கப்படாத நிலையில், இதுகுறித்த ஆவணங்கள் அரசிடம் கொடுத்து, தேடுதலைத் துரிதப்படுத்த அண்டை நாடுகள் மற்றும் நேச நாடுகளின் உதவியை நாடி, மீட்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒகி புயலின் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவித்துத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.