Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கக் கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

ஒகி புயலில் சிக்கி காணாமல்போன கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை மீட்க, விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான ஒகி புயல், அரபிக் கடலில் பயணித்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைப் புரட்டிப்போட்டது. கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற சுமார்  2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், கடும் புயலில் சிக்கி கரை திரும்ப முடியாமல் தவித்தனர். இதையடுத்து, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீனவர்களை மீட்கும் பணி நடந்துவருகிறது.

ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

இதனிடையே, கடலுக்குச் சென்று கரை திரும்பாத மீனவர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளதாகவும், இந்த மீனவர்களை மீட்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும், கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இன்று ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமேஸ்வரம் அஞ்சலகம் முன் தென்மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செரோன்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement