ஒகி புயல் சேதம்குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

ஒகி புயல் சேதம்குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 


ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்பால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒகி புயலுக்கு முன்னதாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளனர். கடலில் சிக்கிய மீனவர்களை மீட்கவேண்டும் என்று மீனவர்கள் நான்கு நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புயல் சேதம் குறித்தக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், துரைக்கண்ணு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும், கன்னியாகுமரியிலிருந்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்யும் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ராமச்சந்திரன், ராஜேந்திரகுமார், ஜோதி நிர்மலா சாமி ஆகியோரும் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனையில் கலந்துகொண்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!